இண்டேன் நிறுவன சிலிண்டர்களுக்கான முன்பதிவு மற்றும் புதிய இணைப்புகளை பெற மிஸ்டுகால் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வீடுகள் தோறும் சமையல் கேஸ் சிலிண்டர்களை புக் செய்வதில் மத்திய அரசு அண்மையில் ஒரு புதிய நடைமுறையைக் கொண்டு வந்தது. இதன்படி நமது கைபேசியிலேயே கியாஸ் சிலிண்டர்களை புக் செய்து விடலாம் இதற்காக பிரத்யேக மொபைல் எண்களும் தரப்பட்டன. இண்டேன் சமையல் கியாஸ் வாடிக்கையாளர்கள் 8124024365 என்ற எண்ணை அழுத்தி பதிவு செய்யவேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த முறையில் வாடிக்கையாளர்கள் 24 மணி நேரமும் கேஸ் புக்கிங் செய்யலாம்.
இந்நிலையில் இண்டேன் கேஸ் சிலிண்டர் புக்கிங் மற்றும் புதிய இணைப்புகளை பெற மிஸ்டுகால் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 8454955555 என்ற எண்ணுக்கு மிஸ்கால் கொடுத்தால் கேஸ் புக்கிங் ஆகிவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல புதிய இணைப்புகளுக்கு 84549 55555 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் தரலாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.