Categories
தேசிய செய்திகள்

ஒரு மிஸ்டு கால் போதும்… 20 லட்சம் வரை கடன்… SBI அதிரடி அறிவிப்பு…!!!

ஒரு மிஸ்டுகால் மூலமாக வாடிக்கையாளர்கள் 20 லட்சம் ரூபாய் வரை கடன் பெறும் சிறப்பு திட்டத்தை எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு மிஸ்டுகால் மூலமாக தனிப்பட்ட கடன்களை வழங்க தொடங்கியுள்ளது. இந்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. எஸ்பிஐ எக்ஸ்பிரஸ் கிரடிட் தனிநபர் கடன் சேவை உடனடி தனிநபர் கடனை பெற முடியும்.

அதற்கு வாடிக்கையாளர் ஒரு மிஸ்டு கால் மட்டுமே கொடுக்க வேண்டும். அதன் பிறகு வங்கி ஒப்புதலுடன் கடனை விரைவில் வாங்கிக் கொள்ளலாம். இந்த கடனின் வட்டி விகிதம் 9.6% குறைவு. இந்தத் திட்டத்தின் மூலமாக 25 ஆயிரம் முதல் 20 லட்சம் வரை கடன் பெற முடியும். மேலும் 5 முதல் 20 லட்சம் ரூபாய் வரை ஓவர் டிராஃப்ட் சேவையும் வழங்கப்படுகின்றது. இதற்கு எந்த ஒரு உத்திரவாதம் மற்றும் பாதுகாப்பு தேவையில்லை. இந்த கடனை பெறுவதற்கு எஸ்பிஐ இன் சம்பள கணக்கு வைத்திருக்க வேண்டும்.

அவர்களின் மாத சம்பளம் 15 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட தாக இருக்க வேண்டும். மேலும் எஸ்பிஐ சம்பள கணக்கு வைத்திருப்பவர்கள் மத்திய, மாநில, அரை அரசு, மத்திய பொதுத்துறை நிறுவனம், நன்மை பயக்கும் மாநில பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களின் கல்வி நிறுவனங்களில் பணியாற்ற வேண்டும் என்பது கட்டாயம்.

Categories

Tech |