லட்சம் கோடிகளை கொட்டி எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார். அதன்பிறகு ட்விட்டரில் அதிரடியாக பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார். இந்த நிலையில் இவர் நடத்திய வாக்கெடுப்பில் டுவிட்டரின் தலைமை பொறுப்பில் இருந்து அவர் விலக வேண்டும் என்று 57.5% பேர் விருப்பம் தெரிவித்தார்கள். ‘
இதற்கு பதில் அளித்த எலான் மஸ்க், பதவிக்கேற்ற ஒரு முட்டாளை விரைவில் கண்டறிந்த பிறகு ட்விட்டர் சிஇஓ பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறேன். அதன் பிறகு மென்பொருள் மற்றும் சர்வர் குழுக்களுக்கு மட்டும் தலைமை வகிப்பேன் என்று கூறியுள்ளார்.
I will resign as CEO as soon as I find someone foolish enough to take the job! After that, I will just run the software & servers teams.
— Elon Musk (@elonmusk) December 21, 2022