மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் பிரபலமான நடிகை தான் அனுபமா பரமேஸ்வரன். இவர் தமிழில் கொடி, தள்ளிப்போகாதே போன்ற படங்களில் நடித்துள்ளார். அவர் தற்போது தெலுங்கு கன்னட படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். தெலுங்கில் ஏராளமான படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகி வருகிறார். அந்த அளவுக்கு அதிகமாக தெலுங்கில் அவரது மார்க்கெட் எகிறியுள்ளது. அந்த வகையில் ரவுடி பாய்ஸ் என்ற தெலுங்கு படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் நடித்தார். இதுவரை அவர் எந்த முத்தக் காட்சியிலும் நடிக்காமல் இருந்த நிலையில் இந்த படத்தின் மூலம் அதை நிரூபித்துள்ளார்.
அண்மையில் அந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நடிகை அனுபமா பரமேஸ்வரன் ரவுடி பாய்ஸ் திரைப்படத்தில் ஒரு முத்த காட்சியில் நடிப்பதற்காக 50 லட்சம் ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது. முதலில் இது போன்ற காட்சியில் நடிக்க மறுத்ததாகவும், பின்பு 50 லட்சம் தருவதாக கூறியவுடன் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. தெலுங்கில் வெளியான இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக அஷிஷ் ரெட்டி நடித்துள்ளார். படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.