Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஒரு முறையான சட்டம் இல்ல… QR CODE பயன்படுத்தி புது முயற்சி… மதுரை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு…!!

வனவிலங்கு சார்ந்த பொருட்கள் குறித்த விவரங்களை QR CODE மூலம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பொதுநல மனு அளிக்கப்பட்டுள்ளது.

மணிபாரதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், வனவிலங்குகளை பாதுகாக்க 21 நாடுகளில் கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதேபோல் இந்தியாவில் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். அதாவது இந்தியாவில் இருக்கும்  வனவிலங்குகளின் பற்கள் மற்றும் எலும்புகள் ஆகியவற்றை வேட்டையாடி பின் அதனை வெளிநாடுகளுக்கு கடத்துகின்றனர்.இவ்வாறு கடத்தப்படும் பொருட்களை பல சமயங்களில் காவல்துறையினர் பறிமுதல் செய்து வனத்துறை உயிரியல் பூங்காக்களில் மற்றும் தனியார் இடங்களிலும் வைக்கப்பட்டுள்ளன.

இதனை பாதுகாக்க எந்த ஒரு முறையான சட்டமும் இல்லை. தமிழகத்தில் வேலூர், சத்தியமங்கலம் போன்ற பகுதிகளில் வைத்திருந்த புலி, பற்கள், நகங்கள் ஆகியவை தீ விபத்தில் கருகின. ஆகையால் பறிமுதல் செய்யப்படும் அனைத்து வன விலங்கு சார்ந்த பொருள்களை வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்யவும், தனியாரில் இருக்கும் அனைத்து வனவிலங்கு பொருட்களுக்கும் ‘QR CODE’ மூலம் இணையத்தில் பதிவேற்றபட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஹேமலதா முன்பு விசாரிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு வன விலங்கு முதன்மை பாதுகாவலர் பதிலளிக்கவும், மேலும் பறிமுதல் செய்யப்பட்ட வனவிலங்கு சம்பந்தப்பட்ட பொருட்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்த தகவல்களை மத்திய மாநில வனவிலங்கு துறை செயலாளர் ஆறு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு இந்த வழக்கை ஒத்திவைத்தனர்.

Categories

Tech |