Categories
தேசிய செய்திகள்

ஒரு முறை சி.டி ஸ்கேன் எடுப்பது…. புற்றுநோய்க்கு வழிவகுக்கும் – எய்ம்ஸ் கடும் எச்சரிக்கை…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது.

எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.

இதனால் கொரோனாவால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே கொரோனா நோயாளிகள் சி.டி.ஸ்கேன் எடுப்பது நன்மை இல்லை. ஒரு முறை சிடி ஸ்கேன் எடுப்பது 300 முறை எக்ஸ்ரே எடுப்பதற்கு சமம். எனவே இது புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |