மத்திய மந்திரி அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
இந்தியைதான் ஆங்கிலத்திற்கு மாறாக உள்ளூர் மொழிகளை அல்ல. இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும், ஹிந்திதான் நாட்டின் அதிகாரபூர்வ மொழியாகும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அமித்ஷாவின் கருத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் அமைச்சரின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் மனோ தங்கராஜ் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது, “அரசியல் சாசனத்துக்கு எதிராக பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அரசியல் சாசனத்திற்கு எதிரான கருத்துக்களை ஒரு மத்திய மந்திரி பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும் ஒரு மொழி என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்தியை திணிப்பதற்கு தமிழ்நாட்டில் ஆதரவு கிடையாது என கூறியுள்ளார்.