நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஒரு ரூபாயில் மத்திய அரசின் வருவாய் மற்றும் செலவினங்கள் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
கடன் வட்டியாக மத்திய அரசுக்கு 36 பைசா வருவாய் கிடைக்கிறது. GST எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மூலமாக 15 பைசா வருவாய் கிடைக்கிறது. வருமானவரி மூலமாக 14 பைசாவும், கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியாக 13 பைசாவும் கிடைக்கிறது. உற்பத்தி வாரியாக 8 பைசாவும், வரி அல்லாத வருவாயாக 6 பைசா கிடைக்கிறது. பங்கு விற்பனை மூலமாக 5 பைசாவும், சுங்க வாரியாக 3பைசாவும் வருவாயும் கிடைக்கிறது.
ஒரு ரூபாயில் 20 பைசா கடனுக்கு வட்டியாக செலவிடப்படுகிறது. மாநில பங்கீடுகளுக்கு 16 பைசாவும், மத்திய அரசு திட்டங்களுக்கு 13 பைசாவும் செலவிடப்படுகிறது. நிதிக்குழு ஆணையம் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு பரிவர்த்தனை பத்து பைசாவும், இதர செலவினங்களுக்காக பத்து பைசாவும் செலவிடப்படுகிறது.
மத்திய அரசு ஆதரவு திட்டங்களுக்காக 9 பைசாவும் செலவிடப்படுகிறது. பாதுகாப்பு துறைக்கு 8 பைசாவும், மானியன்களுக்காக 8 பைசாவும் செலவிடப்படுகிறது. ஓய்வூதியங்களுக்கு 5 பைசா செலவிடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது