மை இந்தியா கட்சி ஆட்சிக்கு வந்தால் மருத்துவ படிப்பிற்கு ஒரு ரூபாயில் சீட்டு வழங்கப்படும் என அகில இந்திய தலைவர் அனில் குமார் தெரிவித்தார்.
இந்தியாவில் சில மாநிலங்களில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது.
இந்நிலையில் திண்டுக்கல்லில் மை இந்தியா கட்சி அலுவலகத்தை அகில இந்திய தலைவர் அணில் குமார் திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், ‘மை இந்தியா கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்கள் அனைத்தும் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும். மேலும் தேசிய உடைமையாக்கப்பட்ட வங்கிகளில் பெறப்பட்ட கடன்களுக்கான தொகை அனைத்தும் அரசின் சார்பில் செலுத்தப்படும்.
விவசாயித்திற்கான மின் 100 நாட்களுக்குள் கொடுக்கப்படும், விவசாயத்திற்கான உள்கட்டமைப்பு செய்யப்படும். 65 வயதிற்கு மேற்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் மாதம் ரூ. 5000 பென்சன் வழங்கப்படும், அனைத்து மாவட்டத்திலும் கோ சாலை அமைக்கப்பட்டு
சாலை, குடிநீர் மற்றும் மின்சாரம் வசதி இல்லாத கிராமங்களுக்கு அனைத்து அடிப்படை செய்து தரப்படும்.
ஆட்டோ ஓட்டுநர், புகைப்பட கலைஞர்களுக்கு என்று தனியாக நலவாரியம் அமைக்கப்படும், உயர்கல்வி படிப்பு செலவை அரசே ஏற்கும், மருத்துவ படிப்பு ஒரு ரூபாயில் வழங்கப்படும் போன்ற பல்வேறு திட்டங்கள் வகுத்துள்ளோம்’ என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் நாராயண பிரபு, மாவட்ட தலைவர் கார்த்திகேயன், மாவட்ட செயலாளர் சவடமுத்து, பொருளாளர் திருநாவுக்கரசு உட்பட பலர் பங்கேற்றனர்.