Categories
தேசிய செய்திகள்

ஒரு லட்சம் கோடியை கடந்த ஜிஎஸ்டி வரி வசூல்…. மத்திய நிதி அமைச்சகம்….!!!!

மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி வரி அதிகரித்து வருகிறது. அதன்படி இன்று முதல் ஜிஎஸ்டி வரி உயர்வு அமலில் இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து கடந்த டிசம்பரில் ஜிஎஸ்டி வரி வசூல் வசூல் ரூ. 1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தை விட கடந்த டிசம்பரில் வருவாய் 13% அதிகம் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நிதி அமைச்சகம் கூறியது, “டிசம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி ரூ.1,29,750 கோடி வசூலாகியுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி வரி ரூ.22,578 கோடி, மாநில ஜிஎஸ்டி வரி ரூ.28,658 கோடி மற்றும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி ரூ.69,155 கோடி ஆகும். இதில் செஸ் வரியாக ரூ.9,350 கோடி கிடைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |