Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“ஒரு லட்ச தீப விழா”….. சாமிக்கு சிறப்பு அலங்காரம்….. கோவிலில் திரண்ட பக்தர்கள்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விருப்பாச்சிபுரத்தில் ஸ்ரீ ராகவேந்திரா சாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு நேற்று ஒரு லட்சம் தீப விழா நடைபெற்றுள்ளது. இதனை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கார்த்திகை தாமோதர ஹோமம், துளசி பூஜை, அலங்கார சேவை நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் பக்தர்கள் கோவில் முழுவதும் ஒரு லட்சம் விளக்கேற்றி வழிபாடு நடத்திய பிறகு மகா தீபாராதனையும் உபகார பூஜையும் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Categories

Tech |