ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கு விற்கப்படும் என்று ட்விட்டரில் ஒரு செய்தி வைரலாக பரவி வருகின்றது. இந்த செய்திக்குப் பின்னால் உள்ள உண்மையை குறித்து தெரிந்து கொள்வோம்.
பெட்ரோல் டீசல் விலை, சமையல் எரிவாயு விலை என்று அடுத்தடுத்து மக்களுக்கு அதிர்ச்சியை தரும் விஷயங்கள் வந்த வண்ணம்தான் உள்ளது. ஏற்கனவே இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத மக்கள் தற்போது ஒரு லிட்டர் பாலின் விலை 100 ரூபாய் வரைக்கு விற்கப்படும் என்று டுவிட்டரில் வெளியான செய்தி மக்களிடையே ஒருவித பீதியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் பால் என்பது ஒவ்வொரு வீட்டிலும் மிக அத்தியாவசியமான ஒரு பொருள்.
அந்த செய்தியில் என்ன கூறியிருந்தது என்பதை இதில் தெரிந்து கொள்வோம் . “அதிகரித்துவரும் எரிபொருள் வீதத்தை எதிர்த்து பால் விலை ஒரு லிட்டருக்கு 100 ஆக உயர்த்தப்படும் என்று பாரதிய கிசான் யூனியனின் மாவட்ட தலைவர் மல்சிங் கூறியதாக குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையில் எரிபொருள் விலை அதிகரித்ததை விவசாயிகள் எதிர்க்கின்றன. எனவே தங்களிடமிருந்து எதிர்பார்க்கும் பாலின் விலையை நாங்கள் இவ்வாறுதான் உயர்த்துவோம்” என்று அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.
ஆனால் இந்த செய்தி தவறானது என்றும் பால் விலையேற்றம் குறித்து சட்ட பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஒரு லிட்டர் பால் 100 ஆக உயர்த்த எந்த முடிவும் எடுக்கவில்லை என்பது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.