இங்கிலாந்தில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு 18 கோடி மதிப்புள்ள ஊசி செலுத்தப்பட்டு உள்ளது.
இங்கிலாந்தில் வசித்து வரும் Willis.என்பவருக்கு ஒரு வயதில் Edward என்ற குழந்தை உள்ளது. இந்த குழந்தை அரியவகை நோயான spinal muscular atrophy-யால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட இந்த குழந்தைக்கு தசை கிடைக்கக்கூடிய போதுமான அளவு ஊட்டச்சத்து கிடைக்காததால் இந்தக் குழந்தையால் எழுந்து கூட நிற்க முடியாது.
இந்த தகவல் அறிந்ததும் கிரௌட் ஃபண்டின் மூலம் நிதி திரட்டப்பட்டு உலகிலேயே அதிக விலையுடைய Zolgensma ஊசியை இந்த குழந்தைக்கு செலுத்தினர். இந்த ஊசியின் விலை 18 கோடி ஆகும். இதனைத் தொடர்ந்து இந்த குழந்தையும் மற்ற குழந்தைகளைப் போல் விரைவில் ஏழுந்து விளையாடும் என குழந்தையின் பெற்றோர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.