Categories
உலக செய்திகள்

ஒரு வயது குழந்தையின் கண்ணில் சுட்ட கொடூரம்.. மியான்மரில் தொடரும் அட்டூழியம்.. ஒரே நாளில் 114 பேர் சுட்டுக்கொலை..!!

மியான்மரில் இராணுவ ஆட்சி இரக்கமின்றி ஒரு வயது குழந்தையின் கண்ணில் சுட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

மியான்மர் ராணுவம் கடந்த மாதத்தில் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியதுடன் முக்கிய தலைவர்களையும் சிறை வைத்தது. இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் பொதுமக்கள் இராணுவத்தின் அதிகாரத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் ராணுவம்  கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியும், மக்களை சுட்டுக் கொன்று குவித்துவருகிறது.

நேற்று ஒரே நாளில் மட்டுமே சுமார் 114  நபர்களை ஆயுதம் ஏந்திய படை கொன்றுள்ளது. இந்த நேரத்தில் யாங்கோனில் இருக்கும் தமனில் ஒரு வயதுள்ள குழந்தை ஒன்று விளையாடிக்கொண்டிருந்துள்ளது. அப்போது ஆயுதம் ஏந்திய படை, சிறு குழந்தை என்றும் பாராமல் இரக்கமின்றி ரப்பர் புல்லட்டால் அக்குழந்தையின் கண்ணில் சுட்டுள்ளார்கள்.

https://twitter.com/Myanmar_Now_Eng/status/1375753264071802882

இதனால் அந்த பெண் குழந்தை வலியால் துடி துடிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் குழந்தையின் காயம் தொடர்பான தகவல் ஏதும் கிடைக்காத நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு குழந்தை நலமுடன் இருப்பதாக நம்பப்படுகிறது.

Categories

Tech |