ஸ்விட்ஸர்லாந்தில் இரண்டாவது முறையாக கொரோனா தொற்றால் பிரீ டெமோகிராடிக் கட்சியை சேர்ந்த அரசியல்வாதி நாதலியே போன்டநெட் பாதிக்கப்பட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரின் நிதி அமைச்சரான 56 வயதான நாதலியே போன்டநெட் ஒரு வருடத்திற்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். பிறகு சிகிச்சையால் குணமடைந்து வீடு திரும்பினார். ஆனால் தற்போது அவர் இரண்டாவது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அவர் நேற்று முதல் காய்ச்சல் அடித்ததாக ஃபேஸ்புக்கில் தெரிவித்திருந்தார்.இதனால் அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.