செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், திருவொற்றியூரில் கட்டடம் இடிந்த சம்பவத்தில் தரமில்லை என ஐஐடி அறிக்கை தாக்கல் செய்தும், இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதுதான் கண்டனத்துக்கு உரியது, இதே திருவொற்றியூரில் மக்கள் ஒவ்வொருவரையும் நேரா சந்தித்து பேசினேன். ஒரு வருடமாக நாங்கள் புகார் அளித்துக்கொண்டு தான் இருக்கிறோம் அரசாங்கத்திடம்….
வீடுகள் விழுந்து தரம் இல்லாம இருக்கு.எங்களுக்கு மாத்தி கொடுங்க என்று சொல்லி அத்தை மக்களும் புகார் கொடுத்துருக்காங்க. இருந்தும் கவனக்குறைவு காரணமாக தான் கட்டிடங்கள் இடிந்து விழுந்திருக்கிறது. அதுமட்டும் இல்ல இன்னும் 300 வீடுகள் அங்கே இருக்கு. இப்ப ஜேசிபி வச்சு எடுக்கும் போது மற்ற கட்டிடங்கள் எல்லாம் தரம் இல்ல.
நான் எல்லாத்தையும் நேரடியா பார்த்துட்டு வந்தேன். அதனால் கவனம் செலுத்த வேண்டும். அரசாங்கம் வந்து வெறும் மெயின் ரோடுக்கு போய் மழை எங்க வந்துருக்கு, எங்கு தேங்குது என பாக்குறது மட்டும் வேலை இல்லை, உண்மையில் ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும்.
திருநெல்வேலியில் பள்ளி கட்டிடம் இடிந்தவுடன் எல்லா பள்ளிகளிலும் ஆய்வு செய்வது, கட்டிடம் விழுந்தா எல்லா கட்டிடத்தையும் ஆய்வு செய்வது, பஸ் சரியில்லை என்றால் அந்த ஒரு மாதத்திற்கு பஸ் ஆய்வு பண்றது இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. இதை நிர்வாகம் சரி பண்ணி முறையாக நடக்கணும். அப்பதான் மக்களுடைய பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என தெரிவித்தார்.