நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, முதல்வர் மேட்டூரில் போய் தண்ணீரை திறந்துவிடுறாரு. ஆனால் வாய்க்கால்களை தூர்வாரும் பணி இந்த மாதம் 20ஆம் தேதி வரை இருக்கு. அப்படி இருக்கும் போது அங்கு வந்து தண்ணீரும் திறந்து விடுறாரு. திரும்ப டெல்டா மாவட்டங்களுக்கு போய் தூர் வாரும் பணியை பார்க்கிறாரு. இது எப்படின்னு எனக்கும் புரியல, உங்களுக்கு புரியுதா என்று தெரியல.
ஏன்னா அந்தத் திட்டங்களை செயல்படுத்தவில்லை. செயல்படுத்தாமல் ஏழாவது நாள் தண்ணீர் போய்டுச்சு அங்க. அப்படி இருக்கும்போது எப்படி தூர்வார முடியும் ? ஏதாவது ஒரு இடத்தில் தண்ணீரை தேக்கி வைத்து விட்டு, அங்க போய் நின்னா எப்படி தூர்வாருவதாக நாம எடுக்க முடியும். இப்போ அவங்க சொல்றாங்க. நாங்க தண்ணியை திறந்து விட்டுடோம். சீக்கிரமா எல்லாம் நடக்குதுன்னு.
உங்ககிட்ட உரம் இருப்பு வச்சிருக்கீங்களா ? முதல் விதை நெல்லே கிடைக்கலனு சொல்லுறாங்க டெல்டா மாவட்டத்தில…அதனுடைய தொடர்ச்சியா நீங்க உரம் கொடுக்கணும். உங்க கிட்ட கையில உரம் இருக்கா ? எதுவுமே திட்டமிட்டு செயல்படல. அது வந்து ஒரு வருடகாலமாக நான் கவனிச்சிட்டு இருக்கேன், இப்படி நடக்குது. மக்கள் கிட்டயும், ரொம்ப சீக்கிரம் வெறுப்பு ஏற்பட்டுட்டு.
அம்மா இருந்தப்ப பிரியா எதுவா இருந்தாலும் மீட்டிங்ல வந்து எல்லா செயலாளர்களிடமும் கலந்துரையாடவும் நடக்கும். அதுல யார் சொல்வது நல்லது என்பதை எடுத்துக்குவாங்க அம்மா ஆனா இப்போ அதிகாரிகளுக்கே எதுமே தெரியுறது இல்ல என விமர்சித்தார்.