மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன. மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 34 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக வைரஸ் பரவலால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக அரசுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியால் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவை தொகை வழங்கப்படவில்லை. அகவிலைப்படி என்பது பணவீக்கத்தை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் தொகையாகும்.
இந்நிலையில் தற்போது ஹோலி பண்டிகை வர உள்ளதை முன்னிட்டு விரைவில் அகவிலைப்படி வழங்கப்படுமென தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே உக்ரைன் ரஷ்ய போரால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால் பணவீக்கம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதன் தாக்கத்தால் இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் உயரும் வாய்ப்புள்ளதால் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.