Categories
மாநில செய்திகள்

ஒரு வழியா ஓகே சொன்ன ஓபிஎஸ்-ஈபிஎஸ்….. “ஜூன் 23இல் பொதுக்குழு கூட்டம்”….!!!!

ஜூன் 23ஆம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று ஓபிஎஸ் இபிஎஸ் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ” அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 23.6.2022 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் தற்காலிக கழக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.

அதிமுக கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்அளில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்’  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக- பாஜக இடையே கூட்டணியில் தொடர்ந்து விரிசல் அதிகரித்து வரும் நிலையில் வரும் 23ஆம் தேதி நடைபெறும் செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |