ரஜினிகாந்த் தற்போது நடிக்கும் திரைப்படத்தின் கதாநாயகி யார் என்பது தெரியவந்துள்ளது.
தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றது மற்றும் அனிருத் இசையமைக்கின்றார். இரு மாதங்களில் இத்திரைப்படம் தொடங்குவதற்கான பணிகளை செய்து வருகின்றார் நெல்சன்.
இப்படத்தில் முக்கிய வேடங்களில் விஜய் சேதுபதி, வடிவேலு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதற்கு ஹீரோயினை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் ரஜினிக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.