கூடலூர் சாலையில் காலை, மாலை நேரங்களில் ஒரு வழி பாதையை முறையாக கடைபிடிக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தாலுகா அலுவலகம் செல்லும் சாலையில் வேலியில் இருந்து கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கு காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை ஹெல்த் கேர் வழியாக கூடலூர் நகருக்குள் ஒரு வழி பாதையாக வாகனங்கள் இயக்கப்படுகின்றது.
இந்த நடைமுறையை சில வாகன ஓட்டிகள் கடைபிடிப்பது இல்லை. இதனால் பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கு இடையூறாக இருக்கின்றது. வாகன ஓட்டிகளுக்கு தெரியாத வகையில் இருந்த அறிவிப்பு பலகையை போலீசார் அகற்றி மறுபுறம் நிறுத்தி வைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து நிர்ணயித்த நேரத்தில் ஒரு வழி பாதையில் செல்லாமல் விதியை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.