தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னை வேளச்சேரி 176 வது வார்டில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக அதிமுகவினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதாவது, அதிமுகவைச் சேர்ந்த சுகுமார், வெங்கடேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஒரு வாக்காளருக்கு தலா 3,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை பணப்பட்டுவாடா செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூபாய் 23,000 பறிமுதல் செய்யப்பட்டது..