கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள ஒரு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து காவி துணி அணிந்து இந்து மாணவர்கள் கல்லூரிக்குள் நுழைந்தனர். இதனால் இரு தரப்பினரிடையே வெறுப்பு உணர்வு ஏற்பட்டு பெரும் பதற்றமான சூழல் உருவானது.
இதனை தொடர்ந்து கர்நாடகாவில் திங்கள் முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் கல்லூரிகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் கல்லூரிகள் திறப்பு வரும் 16 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஒரு வாரத்திற்குப் பிறகு பி.யூ.சி. உள்பட டிகிரி கல்லூரிகள் இன்று திறக்கப்படுகின்றன.