Categories
மாநில செய்திகள்

ஒரு வாரத்திற்கு பிறகு தக்காளி விலை கடும் சரிவு…. மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக தக்காளி விலை புதிய உச்சத்தை தொட்டு 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. வடகிழக்கு பருவமழை காரணமாக தக்காளி வரத்து வெகுவாக குறைந்ததால், கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்த 4 நாட்களாக ஒரு கிலோ தக்காளி 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் 50 ரூபாய் குறைந்து  நேற்று 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று தக்காளி விலை அதிரடியாக 100 ரூபாய் குறைந்துள்ளது. அதனால் மொத்த விற்பனை 30 முதல் 35 வரை சிறு மொத்த கடைகளில் தக்காளி ஒரு கிலோ 40 ரூபாய்க்கு இன்று காலை விலை நிலவரம் செய்யப்பட்டுள்ளது. தக்காளி விலை வெகுவாக குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |