Categories
மாநில செய்திகள்

ஒரு வாரம் விடுமுறையா?…. உற்சாகத்தில் மாணவர்கள்…. !!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இயல்பை விட அதிக கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து அதீத மழை பெய்து வருகிறது. அதில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் சனிக்கிழமை தொடங்கிய மழை இன்று வரை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றனர்.

அதன்படி இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, கன்னியாகுமரி மற்றும் நீலகிரி ஆகிய 8 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கடலூர், விழுப்புரம், சேலம், ராணிப்பேட்டை மட்டும் கள்ளக்குறிச்சி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக இந்த வாரம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை வங்கக்கடலில் புதிய காற்றழுத்த பகுதி உருவாகி வலுபெற்று சென்னைக்கு அருகில் வர வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Categories

Tech |