செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவு அணியை சேர்ந்த புகழேந்தி, நம்ம டிஜே (ஜெயக்குமார்) பத்தி தான் அவர் பேட்டி கொடுத்துட்டு போனாரு. அவர் கவுன்டர் கொடுத்து தான் ஆகணும். வேற வழி இல்ல அவர் என்ன பண்றாருனா.. இப்ப சிபிஐ விசாரணை வேணுன்றாரு. Central bureau of investigation விசாரணை வேணுன்றாரு. நான் ஏற்கனவே அவருக்கு பல பேர் வச்சிருக்கேன். அத இங்க சொல்ல விரும்பல.
சரியா இருக்காது. நான் என்ன சொல்றேன். இங்க சிபிஐ விசாரணை வேணும் கரெக்ட். ஆபீஸ அடிச்சோம், உடைச்சோம் இது வேணும். அங்க 4,500 கோடிக்கு ஏன் சிபிஐ விசாரணை வேண்டாம். நெடுஞ்சாலை துறையிலே நடந்த ஊழலுக்கு டெல்லியில் சிபிஐ விசாரணை வேண்டாம்.
ஆனா இங்க வந்து நின்னுட்டு இங்க இருக்கிற போலீஸ் என்ன பண்ணிடுச்சு ? அக்யூஸ்ட்ட எங்க கிட்டயே கொடுங்க நாங்க கொண்டு போய் விசாரிக்கிறோம் அப்படின்னு சொல்லிடிச்சு. DVC Director of vigilance and anti corruption.. அங்க இருக்கிற போலீஸ் என்ன சொல்லுச்சு. இதெல்லாம் கோர்ட்டு தான் சொல்லிருக்குன்னு சொல்லிச்சு. இந்த சட்டப் போராட்டத்தில் அந்த வழக்கு இங்கேயே சென்னைக்கு வந்துவிட்டது. இங்க வந்து ஒன்னு சொல்றாரு. அங்கு வந்து ஒன்னு சொல்றாரு.
சிபிஐ அது இதுன்னு சொல்லி போற இடத்துல எல்லாம் சார் எங்கெங்க போறாங்களோ அங்கெல்லாம் துரோகம். நாங்க என்ன துரோகம் பண்ணோம் சொல்லுங்க. நீங்க தானே துரோகம் பண்ணீங்க. துரோகம் பண்ணது நீங்க. ஒரே ஒரு பதவி வேண்டும் என்று சொல்லி கட்சியை செங்குத்தாக பிளந்தது இவர்கள் தான். எந்த துரோகத்தை ஓபிஎஸ் பண்ணார். அண்ணா பண்ணாரு சொல்லுங்க பாப்போம். அவர் எங்கேயுமே இதை இவங்கள பத்தி எல்லாம் பேசுறதே இல்ல சார். ஒரு வாய் ஒரு வார்த்தை கூட பேசுறதே இல்ல என தெரிவித்தார்.