Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஒரு வீடியோவுக்கு 50 ரூபாய்”… பட்டதாரி வாலிபரிடம் ரூ.7 1/2 லட்சம் மோசடி…. மர்ம நபருக்கு வலைவீச்சு….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளனூரில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டதாரியான அன்பழகன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அன்பழகனுக்கு வேலைவாய்ப்பு சம்பந்தமாக முகநூலில் ஒரு லிங்க் வந்தது. அதிலிருந்த செல்போன் எண்ணை அன்பழகன் தொடர்பு கொண்டு பேசிய போது, மறுமுனையில் பேசிய நபர் விளம்பர வீடியோவை பார்த்தால் ஒரு வீடியோவுக்கு 50 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தெரிவித்தார். இதனை நம்பி அன்பழகன் அவர் அனுப்பிய 7 வீடியோக்களை பார்த்த பிறகு அவரது வங்கி கணக்கிற்கு 350 ரூபாய் வந்தது.

இதனையடுத்து எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என அந்த நபர் கூறியுள்ளார். இதனை நம்பி அன்பழகன் 3 தவணைகளாக அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் 7 லட்சத்து 53 ஆயிரம் ரூபாயை செலுத்தியுள்ளார். ஆனால் பணம் எதுவும் திரும்ப வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அன்பழகன் மீண்டும் அந்த எண்ணை தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் என வந்தது. இதனால் தான் மாற்றப்பட்டதை உணர்ந்த அன்பழகன் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |