Categories
தேசிய செய்திகள்

ஒரு வீட்டில் 3 பேருக்கு மேல் கொரோனா இருந்தால்?…. அரசு வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அவ்வகையில் கர்நாடக மாநிலம் பெங்களூர் மாநகராட்சியில் அதிக அளவிலான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த பெங்களூர் மாநகராட்சி அதிரடி அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டில் 3 பேருக்கு மேல் கொரோனா உறுதி செய்யப்பட்டால் அந்த குடியிருப்பு பகுதி முழுக்க சீல் வைக்கப்படும்.

அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகள் முழுவதும் தொடர்ந்து பரிசோதனை நடத்தப்பட்டு வருகின்றது. யாருக்காவது தொற்று உறுதி செய்யப்பட்டால் அடுக்குமாடி குடியிருப்பு முழுவதுமே கட்டுப்பாட்டு பகுதிக்குள் கொண்டு வரப்படும். தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |