Categories
சினிமா

“ஒரு வேலை சிம்புவும் – தனுஷும் நடிச்சிருந்தா…. வேற லெவல் சம்பவமா இருந்துருக்கும்”…. கவலையில் ரசிகர்கள்….!!!

இயக்குனர் வெற்றிமாறன் ‘வடசென்னை’ படத்தில் சிம்பு நடிக்க முடியாமல் போனதற்கான காரணம் பற்றி பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா திரை உலகில் மிகவும் பிரபலமான இயக்குனராக வெற்றிமாறன் திகழ்கிறார். மேலும் இவர் இயக்கியுள்ள படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதிலும் குறிப்பாக தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் வெளியாகும் அனைத்து படங்களுக்கும் தனி ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது. அந்த வகையில் இவர்கள் கூட்டணியில் எடுத்த ‘வடசென்னை’ படம் மிகவும் ஹிட்டாகியுள்ளது.

இப்படம் மக்களின் வாழ்வியலை மையமாக வைத்து உருவான இப்படத்தில் தனுஷ், சமுத்திரக்கனி, அமீர், கிஷோர் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகத்தை தயாரிக்கும் பணிகளில் வெற்றிமாறன் இறங்கியுள்ளார். மேலும் வடசென்னை படத்தில் நடிகர் சிம்புவும் ஆரம்பத்தில் நடிப்பதாக இருந்தது.

ஆனால் கால்ஷீட் பிரச்சனையினால் நடிக்க முடியாமல் போக, தனுஷ் அந்த படத்தில் நடித்தார். இந்த நிலையில் இதுகுறித்து வெற்றிமாறன் அளித்துள்ள பேட்டியில்,  ‘வடசென்னை’ படத்தில் சிம்பு நடிக்க இருந்தது உண்மைதான். ஆனால் அந்த சமயம் சிம்பு காளை  படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். பிறகு திடீரென்று சிம்பு வெளிநாடு போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால், அங்கு 3,4 மாதங்கள் தங்கிவிட்டார்.

இதனை அடுத்து படத்தை விரைவாக எடுக்க வேண்டிய காரணத்தால், தனுஷை வைத்து படம் பண்ண ஆரம்பித்தேன். அதில் சிம்புவும் ஒரு கேரக்டர் பண்ணுவதாக இருந்தது. ஆனால் படத்தில் ஏற்கனவே பல பெரிய நடிகர்கள் இருப்பதால், கதையை மாற்றி எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் சிம்பு நடிக்க இருந்த கதாபாத்திரம் சின்னதாக அமைந்தது. இது சிம்புவிற்கு நன்றாக இருக்காது என்று நினைத்து தான் அவர் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது என்று கூறியுள்ளார். தற்போது சமூக வலைத்தளத்தில் வெற்றிமாறனின் இந்த பேட்டி வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள், ஒருவேளை இது மட்டும் நடந்து, ஒரே படத்தில் சிம்புவும் -தனுஷும் நடிச்சிருந்தா வேற லெவல் சம்பவமா இருந்திருக்கும் என்று கூறி வருகின்றனர்.

Categories

Tech |