கனிமொழியின் பிறந்த நாளுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து கூறாதது கட்சியில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்த 8 மாத காலத்தில் செல்வாக்கும், கட்சியில் கனிமொழிக்காக முக்கியத்துவமும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் மெல்ல மெல்லக் குறையத் தொடங்கியிருக்கிறது. திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி பிறந்தநாள் அன்று அந்தக்கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என ஒருவர் தவறாமல் மூத்த அமைச்சர்கள் உட்பட அனைவரும் உதயநிதியைச் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.ஆனால் கட்சியின் மூத்த நிர்வாகி, மகளிர் அணியின் செயலாளர் எனப் பொறுப்பில் இருக்கும் திருமதி கனிமொழியின் 54வது பிறந்தநாளில் வெறும் ஒரு சில நிர்வாகிகள் மட்டுமே தங்களது வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.
கனிமொழி பிறந்தநாள்:
கட்சி நிர்வாகிகளைவிடத் தொண்டர்கள், மாற்றுக்கட்சியினர் பலரும் கனிமொழிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுள்ளனர். குறிப்பாக மத்திய உள்துறை அமைச்சர் தொலைப்பேசியில் அழைத்து கனிமொழிக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இது திமுகவின் மூத்த நிர்வாகிகள் பலருக்கு ஒருவிதமான அதிருப்தியை கிளப்பியிருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சரை நீட் விவகாரம் தொடர்பாகச் சந்திக்க நான்கு நாட்கள் அலைந்தும் டி.ஆர் பாலு திமுகவினரை பார்க்க மறுத்துவிட்டார். மேலும் கனிமொழிக்கு உள்துறை அமைச்சர் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து சொல்கிறார். மேலும் சிலர் திமுக தொண்டர்கள் திருமதி கனிமொழியின் சிஐடி காலனி இல்லத்திற்கு சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
நடிகர்கள் பிறந்தநாளுக்கு உடனுக்குடன் வந்து டிவிட்டரில் வாழ்த்து சொல்லும் உதயநிதி, சொந்த அத்தை, கழகத்தின் மகளிர் அணி செயலாளர், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழிக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்லவே இல்லை என பல சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன.
சட்டமன்ற கூட்டத்தொடர் இருந்ததால் நேரில் சொல்லவில்லை என்றாலும், குறைந்தபட்சம் டிவிட்டரிலாவது பிறந்தநாள் வாழ்த்து கூறி இருக்கலாமே மகளிர் அணி நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மழை வெள்ளத்தின் போது தீவிர களப்பணியில் தூத்துக்குடியில் கனிமொழி இருந்த போதும் கூட உதயநிதியின் பிறந்தநாளுக்கு டிவிட்டரில் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். நேரில் வாழ்த்து சொல்ல முடியவில்லை என்றால் கூட சமூக வலைதளத்தின் மூலமாகவாவது உதயநிதி பிறந்தநாள் வாழ்த்துக்களை அத்தைக்கு தெரிவித்திருக்கலாம். ஆனால் அந்த நன்றி கூட இளைஞர் அணி செயலாளருக்கு இல்லை என்று மகளிர் அணி செயலாளர்கள் தாக்கி வருகின்றனர். கனிமொழிக்கும், உதயநிதிக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாகக் கருத்து வேறுபாடு இருந்து வருகிறதாம். கடந்த டிசம்பர் 26ஆம் தேதியன்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 2,000 இளம் பெண்கள் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் திமுக இளைஞரணியில் இணைந்தனர். அதில் பெரும்பாலான பெண்கள் 18 முதல் 30 வயதுடையவர்கள். பெண்களை மகளிரணியில் சேர்க்காமல் இளைஞரணியில் சேர்த்திருப்பது கனிமொழிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக ஏற்படுத்தியுள்ளதாக கட்சி நிர்வாகிகள் சிலர் கூறினர்.
மேலும் தேர்தலுக்கு முன்பு இளைஞரணியின் கீழ் தனியாக இளம் பெண்கள் அணியை உருவாக்கும் முயற்சியில் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு அப்போதே எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இந்த விஷயம் ஸ்டாலின் காதுகளுக்கு கொண்டு செல்லப்பட்டதும், மகளிரணியில் மட்டுமே பெண்கள் அங்கம் வகிக்க வேண்டும் எனத் தலைமை உறுதிபடக் கூறியது. இதையடுத்து அந்த பிரச்சினைக்கு அப்போது முற்றுப் புள்ளி வைக்கப்பட்டதாக திமுகவினர் கூறுகின்றனர்.