Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“ஒரேநாளில்” அடுத்தடுத்த 2 கடைகளில்…. மர்மநபர்கள் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

ஒரே நாளில் 2 கடைகளில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கந்தசாமிபுரத்தில் பாலு என்பவர் வசித்து வருகிறார். இவர் உளுந்தூர்பேட்டை பகுதியில் மரக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வேலை முடிந்ததும் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இவர் மறுநாள் கடைக்கு  வந்தபோது வெளிப்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பாலு கடைக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது கடையில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 50,000 பணம் திருடப்பட்டிருந்தது.

இதேப்போன்று பாலுவின் கடைக்கு அருகில் இருக்கும் மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடையிலும்  மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இந்த  கடையில் இருந்த ரூபாய் 5,000 பணம் மற்றும் 1 மோட்டார் சைக்கிள் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து உளுந்தூர்பேட்டை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தடவியல் நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |