மாண்புமிகு அம்மாவின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மாண்புமிகு அம்மா பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி பிறந்தார். அவரின் பிறந்த நாள் விழா லட்சம் பல லட்சம் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தியும் ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் பல்வேறு வகையில் அம்மாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாண்புமிகு அம்மாவின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் தமிழாக முதல்வரின் செல்வாக்கு சரசரவென்று உயர்ந்துள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர்.