ஜப்பானில் கடந்த ஆண்டு தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கையை கண்டு உலக நாடுகள் அனைத்தும் அதிர்ச்சி அடைந்துள்ளன.
உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் ஜப்பான் நாடு தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டான நாடாக பெயர் பெற்றுள்ளது.இந்நாடு, வாழ்வில் எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் தன்னை தானே ஊக்குவித்து கொண்டு முன்னேறும் நாடாக விளங்கிவருகிறது. இந்நிலையில் ஜப்பானில் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு தற்கொலைகள் அதிகமாக உள்ளது என்பதுதான் மிகவும் வேதனையாக உள்ளது.
இந்த அக்டோபர் மாதம் வரை கணக்குப்படி கொரோனாவில் இறந்த மக்களின் எண்ணிக்கையை விட இப்பொழுது தற்கொலையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்பது அந்நாட்டு அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு உடனடியாக தனிமை துறை என ஒரு துறை உருவாக்கப்பட வேண்டும் என்று ஜப்பான் அரசு கூறியுள்ளது.
இதற்கு டெட் சுஷி சக மோட் டாவை அமைச்சராக நியமித்துள்ளது.ஜப்பான் நாட்டில் ஊடகத்தில் வெளியிடப்பட்ட விவரத்தின் படி கடந்த ஆண்டு 20919 பேர் தற்கொலையால் உயிரிழந்தனர். குறிப்பாக ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொள்கின்றன எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் உடனடியாக தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முதற்கட்ட நடவடிக்கையாககொலையை தடுக்க வும் மக்களின் தனிமையை குறைக்கவும் தனி அமைச்சரவை பிரிவை உருவாக்கியுள்ளது. பின்னர் சமூகத்திலிருந்து விலகி தனிமையில் இருக்கும் மக்களை கண்டறிந்து அவர்களுக்கு மனதளவில் உறுதியைக் கொடுக்கும் வே லையில் ஈடுபடும் என ஜப்பான் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.