சூர்யகுமார் யாதவ் அடிக்கவில்லை என்றால் இந்திய அணி 150 ரன்களை கூட தாண்டி இருக்காது என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் முடிவடைந்து குரூப் 2 வில் இருந்து இந்தியாவும், பாகிஸ்தானும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. அதேபோல குரூப் 1 இலிருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. நாளை (நவ.,9ஆம் தேதி) பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் முதல் அரை இறுதியில் மோதுகிறது. தொடர்ந்து இந்திய அணி நவம்பர் 10ஆம் தேதி இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் அனைவரும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய அணி அரையிறுதிக்கு வந்துள்ளது என்றால் அதற்கு இந்திய அணியின் விராட் கோலி மற்றும் சூர்யா குமார் யாதவ் இருவரும் தான் காரணம் என்பதே உண்மை. சூரியகுமார் யாதவ் கடைசியாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் 25 பந்துகளில் 61 ரன்கள் விளாசினார். மைதானத்தின் அனைத்து பகுதிகளிலும் தெறிக்க விட்ட சூர்யகுமார் யாதவ் மீண்டும் மிஸ்டர் 360 டிகிரி ஷாட்டை அடித்து ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தார். ஆனால் அனைத்து போட்டியிலுமே ஒருவரை மட்டும் நம்பியே இருக்க முடியுமா என்று கேள்விகள் எழுகிறது.
இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் விராட் கோலி இருவரும் பலமுடன் இருந்தாலும், சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக கேப்டன் ரோஹித்சர்மா சொல்லிக் கொள்ளுமாறு இந்த உலக கோப்பையில் சரியாக ஆடவில்லை, முதலில் கே எல் ராகுல் மீது விமர்சனம் இருந்தது, அவர் தொடர்ந்து மூன்று போட்டிகளில் சொதப்பி வந்தார். அதன் பின் கடந்த 2 போட்டிகளில் அரைசதம் அடித்து தற்போது நல்ல பார்மில் தொடர்கிறார். அதை அவர் அப்படியே தொடர வேண்டும் என்பதை ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் ரோகித் ஆட்டம் அந்த அளவுக்கு இல்லை என்பதால் அவர் தொடக்கம் நன்றாக கொடுக்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, சூர்யகுமார் யாதவ் டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 25 பந்துகளில் 61 ரன்கள் அதிரடியாக விளாசினார். மைதானத்தின் அனைத்து பகுதிகளிலும் பந்தை அவர் தெறிக்க விட்டார். அவர் ஒரு புதிய மிஸ்டர் 360 டிகிரி வீரராக உருவாகியுள்ளார். அந்த போட்டியில் விக்கெட் கீப்பருக்கு இடது புறமாக அவர் அடித்த அந்த ஷாட் மிகவும் பிரமாதமாக இருந்தது. அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு ஷாட்டுகளுமே சிலிர்க்க வைத்து விட்டன. அவர் அதிரடியாக குவித்த 61 ரன்கள் தான் இந்திய அணி மெல்போன் ஸ்டேடியத்தில் தங்களது அதிகபட்ச ஸ்கோர் ஆன 186 ரன்களை பதிவு செய்துள்ளது. இல்லையெனில் இந்தியா 150 ரன்கள் கூட தாண்டி இருக்காது என்றார்.
மேலும் அணியில் விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் நல்ல சூப்பர் பார்மில் இருக்கின்றனர். ரோகித் நன்றாக அடி அரை சதம் அடித்திருப்பது அணிக்கு நல்ல விஷயம். ஆனால் இதேபோல் அவர் தொடர்ந்து ரன்களை குவிக்க வேண்டும். சூர்யகுமார் யாதவ் ஜொலிக்க தவறி விட்டார் என்றால் இந்திய அணி 140 – 150 ரன்கள் எடுக்கவே மிகவும் சிரமப்பட்டு இருக்கும். இது மாதிரியான ஒரு சூழலில் கே எல் ராகுல் நினைத்து நின்று ஆடுவது அணிக்கு மிக முக்கியம். சூப்பர் 12 சுற்றில் ரோகித் சர்மாவின் பேட்டிங் குறிப்பிட்டு சொல்லும் படியாக இல்லை, அவர் அரையிறுதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.