ஒரே இடத்தில் 5-வது முறையாக சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் நாடுகாணியிலிருந்து கேரளா எல்லையான வழிக்கடவு வரை அடிக்கடி விபத்துகள் நடைபெறுகிறது. கடந்த 2 வாரங்களாக சரக்கு லாரிகள் பள்ளத்தில் கவிழ்ந்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் இருந்து வந்த சரக்கு லாரி நாடுகாணியில் கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, நாடுகாணியில் ஒரே இடத்தில் 5-வது முறையாக சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சாலை பழுதடைந்து காணப்படுவதால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. எனவே அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.