அலுவலகங்கள் மற்றும் வீட்டில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது உடல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதனால் பாதிக்கப்படுபவர்கள் ஏராளம். அதனைத் தடுக்க ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது எழுந்து நிற்பது, ஓரிரு நிமிடங்கள் நடந்து செல்வது, கை மற்றும் கால்களை அசைக்கும் சிறு உடற்பயிற்சிகள் போன்றவற்றை செய்யலாம். அதுமட்டுமன்றி அடிக்கடி நீர் அருந்துவதும் நல்லது. அதனால் முதுகு வலி, கழுத்து வலி ஏற்படாமல் தடுக்கலாம். நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் உணரலாம்.
மேலும் அலுவலகத்தில் ஒரே இடத்தில் ஏசியில் அமர்ந்து கணினியைப் பார்த்து வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு கண்ணெரிச்சல் உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படும். அதனைத் தடுக்க வேலை செய்து கொண்டிருக்கும் போது இரண்டு நிமிடங்கள் தூரத்தில் உள்ள ஏதாவது ஒரு பொருளை உற்று நோக்குவதன் மூலம் தடுக்க முடியும். இவ்வாறு செய்தால் கண்ணில் ஏற்படும் பல பாதிப்புகள் குறையும்.