பெண்களுக்கு தங்களின் அழகு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அவ்வாறு தங்களின் இளமையை பராமரிப்பதற்கு பல்வேறு முயற்சிகளை பெண்கள் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக முகத்தினை அழகுபடுத்த பல்வேறு பவுடர்கள் மற்றும் ஸ்கிரீம்களை முகத்தில் பூசுகிறார்கள். அதனால் வரும் காலத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே இயற்கையான முறையில் முக அழகு சாதனங்களைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது. அதன்படி ஒரே இரவில் கண்ணில் உள்ள கருவளையங்களைப் போக்க இயற்கையான டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.சுத்தமான மஞ்சள் தூளில் சிறிது தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் மற்றும் சிறிது தேன் சேர்த்து அந்த கலவையை கண்களின் அடியில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வர பெரிய மாறுதல் தெரியும். போலவே வாரம் இருமுறை மட்டும் செய்தால் போதும். கண்ணில் உள்ள கருவளையம் இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும்.