இந்தியாவிற்கு கப்பல் மூலம் எகிப் த்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் பதுக்கல் வியாபாரிகள் வெங்காயத்தை பதுக்க தொடங்கி இருக்கின்றனர்.
ஒரு வெங்காயம் அரைக்கிலோ எடை இருப்பதால் ஹோட்டல்களுக்கு அதிக அளவில் வாங்கிச் சென்றுள்ளனர் .மகாராஷ்டிரா மற்றும் மத்தியப்பிரதேசத்தில் கடந்த ஆண்டு அபரிவிதமான வெங்காய விளைச்சலால் போதிய விலை இன்றி வெங்காயத்தை ரோட்டில் கொட்டி அழிக்கும் நிலை ஏற்பட்டது . இதனால் இந்த ஆண்டு பெரும்பாலான விவசாயிகள் வெங்காயம் பயிரிடுவதை கைவிட்டனர் .மேலும் நடப்பு ஆண்டில் விளைச்சல் குறைந்து போனது.
இதனால் ஓரளவு உயர்ந்த வெங்காயத்தின் விலை பதுக்கல் காரர்களின் குடோனில் இருப்பு வைக்கப் பட்டதால் பலமடங்கு விலை உயர்ந்தது .மக்களிடையே செயற்கையான வெங்காய தட்டுப்பாட்டை உருவாக்கி வெங்காய விலையை ஏற்படுத்தி பகல் கொள்ளையில் ஈடுபட்டனர் .இந்தநிலையில் வெங்காய உற்பத்தியில் 2வது இடத்தில் இருப்பதாக மார் தட்டிக்கொண்ட நாம் 3வது இடத்திலிருக்கும் எகிப்திடம் இருந்து இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டது .