Categories
தேசிய செய்திகள்

ஒரே ஊரில் 100 பேர் போலீஸ் குடும்பம்…. சாத்தியமானது எப்படி?…. நெகிழ வைக்கும் சம்பவம்….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள செட்டிபட்டு என்ற கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் காவல்துறையில் பணியாற்றி வரும் சம்பவம் நெகிழ வைத்துள்ளது. இவர்களில் பலர் காவல்துறையில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், முது நிலை காவலர், பெண் காவலர் மற்றும் தீயணைப்பு துறை உள்ளிட்ட பொறுப்புகளில் பணியாற்றி வருகின்றனர்.

புதுச்சேரி தீயணைப்பு துறையிலும் உதவி ஆய்வாளர் உள்பட பல்வேறு பிரிவுகளில் இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். காவல்துறை பணிக்கான தேர்வு எப்போது அறிவிக்கப்பட்டாலும் அதில் பங்கேற்று இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து அதிக அளவில் தேர்ச்சி பெற்று வெற்றி பெறுகிறார்கள். இதனால் இந்த கிராமத்தை பலரும் போலீஸ் கிராமம் என்று அழைக்கின்றனர்.

Categories

Tech |