நாட்டில் எங்கெல்லாம் ஒரே என்ற வார்த்தை வருகிறதோ அங்கெல்லாம் சர்வாதிகாரமும் ஒடுக்குமுறையும் தலையெழுத்து விடும் என்பதே வரலாறு என கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு இழந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர்.
அதன்படி மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியிருப்பது, “ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே தேர்வு, ஒரே மதம், ஒரே இந்தி, ஒரே சப்பாத்தி மற்றும் ஒரே ஜிப்பா என்னும் வரிசையில் ஒளிந்திருக்கும் உள்ளக்கிடக்கை ‘ஒரே பிரதமர், எங்கெல்லாம் ‘ஒரே’வருகிறதோ அங்கெல்லாம் சர்வாதிகாரமும் ஒடுக்குமுறையும் தலையெழுத்து விடும் என்பதே வரலாறு என்று பாஜகவை” கமல் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் சமநீதியும், சமூக நீதியும் இல்லாத, ஏற்றத்தாழ்வு சமூகத்தில் ‘ஒரே ‘என்று சொல்வதே பெரும் அநீதி எனவும் அவர் தெரிவித்துள்ளார்