சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் தேங்காய் சீனிவாசன். அந்த காலகட்டத்தில் இருந்த நடிகர்கள் அளவிற்கு புகழ் பெற்றவர். தனக்கென்று ஒரு ரசிகர் படை வைத்திருந்தார். நடிப்பின் உச்சத்தில் இருந்தபோது அவர் படங்களை தயாரிக்க தொடங்கினார் . அவர் தயாரித்த கிருஷ்ணன் வந்தான் என்னும் படம் பணம் இல்லாமல் நின்றது. படம் தயாரிப்பதில் அவர் காட்டிய ஆர்வத்தின் காரணமாக அவர் நடிப்பில் சம்பாதித்த பணத்தை இழந்தது மட்டுமல்லாமல் பெரும் கடன்காரன் ஆக மாறினார்.
வேறு வழியில்லாமல் நண்பர்களிடம் பண உதவி கேட்கும் நிலை ஏற்பட்டது. அப்போது எம்ஜிஆரையும் சந்தித்து உதவி கேட்டார். ஆனால் அவர் அப்போதே படம் தயாரிக்க வேண்டாம் என்று எவ்வளவோ சொன்னேன் என் பேச்சை நீ கேட்கவில்லை என்று திட்டி அனுப்பினாராம். ஆனால் சீனிவாசன், வீட்டிற்கு செல்வதற்கு முன்பாகவே ஒருவரிடம் 25 லட்சம் கொடுத்து அந்த பணத்தை தேங்காய் சீனிவாசன் வீட்டில் வைத்துள்ளார். அந்த காலகட்டத்தில் 25 லட்சம் என்பது பல கோடிக்கு சமம். தேங்காய் சீனிவாசன் மற்றும் எம்ஜிஆரின் நட்பு அந்த அளவு உயர்ந்தது.