புகைப்படம் எடுப்பதில் அதிகளவு ஆர்வம் கொண்ட ஐஸ்வர்யாஸ்ரீதர் இயற்கை சூழலையும், வனவிலங்குகளையும் தன்னுடைய கேமராவிற்குள் அடக்கி விடுவதில் வல்லவர் ஆவார். இவர் கடந்த 2020ன் ‘Wildlife Photographer of the Year’ எனும் விருதினை வென்றுள்ளார். இவ்விருதை வென்ற இந்தியாவின் முதல் பெண் புகைப் படக் கலைஞர் எனும் பெருமை இவரையே சேரும்.
புகைப்படக்கலைஞர் விருது வன விலங்குகளை போட்டோ எடுத்து அவற்றில் சிறந்தவற்றை தேர்ந்தெடுக்கும் போட்டியானது ஆண்டுதோறும் நடைபெறும். இந்த சர்வதேச போட்டியை லண்டன் நேச்சுரல் ஹிஸ்டரி ம்யூசியம் நடத்தி வருகிறது. இவற்றில் உலகம் எங்கிலும் உள்ள புகைப்படக் கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
அத்தகைய சிறப்புமிக்க விருதினை ஐஸ்வர்யாஸ்ரீதர் கடந்த 2020 வருடம் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருதினை பெற்ற இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமை இவருக்குக் கிடைத்துள்ளது. லண்டனிலுள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இவ்விருதை பெற்றது தொடர்பாக டுவீட் செய்திருந்த அவர் “இது இந்தியா மற்றும் தன்னைபோன்ற புகைப்படம் கலைஞருக்கு பெரிய அங்கீகாரம் ஆகும். இந்தியாவிலிருந்து இந்த விருதினை பெறும் முதல் இளம்பெண் என்ற வகையில் பெருமையாக கருதுகிறேன்” என்று அவர் பதிவிட்டார்.