Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரே ஒரு பாடலுக்காக ரூ.1 கோடி செலவு செய்த ‘டாக்டர்’ படக்குழு… வெளியான மாஸ் தகவல்…!!!

டாக்டர் படத்தில் இடம்பெற்ற செல்லம்மா பாடலுக்காக ரூ. 1 கோடி செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் வினய், யோகி பாபு, தொகுப்பாளினி அர்ச்சனா, தீபா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

 

Sivakarthikeyan pens a fun romantic track on Tik Tok ban!

சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வருகிற அக்டோபர் 9-ஆம் தேதி இந்த படம் தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் டாக்டர் படத்தில் இடம்பெற்றுள்ள செல்லம்மா பாடலை எடுக்க தயாரிப்பாளர் ரூ.1 கோடி செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |