எல்ஐசி நிறுவனம் புதிதாக ஆரோக்கிய ரக்ஷக் பாலிசியை அறிமுகம் செய்துள்ளது. மருத்துவ அவசர தேவைகளுக்கு நிதி ஆதரவு வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம். இதில் என்ன ஸ்பெஷல் என்றால், பாலிசிதாரருக்கு மட்டுமல்லாமல் அவரது குடும்பத்துக்கும் மருத்துவ அவசரநிலை காலகட்டங்களில் உதவுவது இந்த பாலிசியின் நோக்கம் என எல்ஐசி தெரிவித்துள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள்,
* பாலிசிதாரர், கணவன் அல்லது துணைவி, பெற்றோர் ஆகியோருக்கு (18 முதல் 65 வயது) ஆரோக்கிய ரக்ஷக் மருத்துவக் காப்பீடு வழங்குகிறது. மேலும், 91 நாட்கள் முதல் 20 ஆண்டுகள் வரையிலான குழந்தைகள், சிறுவர்களுக்கும் காப்பீடு உண்டு.
* பாலிசிதாரர், கணவன் அல்லது துணைவி, பெற்றோருக்கான காப்பீட்டுக் காலம் 80 ஆண்டுகள். எனினும் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான காப்பீட்டுக் காலம் 25 ஆண்டுகள்.
* ஃபிளெக்சிபிள் பிரீமியம் செலுத்துவதற்கான வசதியும் உண்டு.
* பாலிசியில் ஒருவருக்கும் மேற்பட்டவர்கள் கவர் செய்யப்பட்டிருந்தால், பாலிசிதாரர் இறக்கும்போது மற்றவர்களுக்கான பிரிமீயத் தொகை ரத்து செய்யப்படும்.
* இதுபோக இந்த பாலிசியில் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவப் பரிசோதனைகளுக்கும் சலுகைகள் கிடைக்கின்றன.