கொரோனா தொற்று பரவல் காரணமாக நிதி நெருக்கடி அதிகரித்துள்ளது. எனவே கைவசம் பணம் இருந்தால் தான் மருத்துவ செலவுகளுக்கு அவசரத்தில் பயன்படுத்தி கொள்ளலாம். எனவே இன்சூரன்ஸ் போன்ற திட்டங்கள் இதற்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் ( எல்.ஐ.சி ) இதுபோன்ற நிறைய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அவற்றில் எல்.ஐ.சி சரல் பென்சன் யோஜனா திட்டம் மிக முக்கியமானது ஆகும். அதாவது இந்த பாலிசியை வாங்குபவர்கள் ஒரே ஒரு பிரீமியம் மட்டும் செலுத்தினால் போதும் ஒவ்வொரு மாதமும் ரூ.12,000 பென்ஷனாக பெறலாம். இந்த திட்டத்தில் 40 முதல் 80 வயது வரை உள்ளவர்கள் பயன் பெறலாம். அதேபோல் கடன் பெறும் வசதி பாலிசி தொடங்கிய 6 மாதங்களுக்கு பிறகு உள்ளது.
அதோடு மட்டுமில்லாமல் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கிலேயே பிரீமியம் தொகை பிடித்தம் செய்யப்பட்டுவிடும். மேலும் மாதாந்திர அடிப்படையிலும், அரையாண்டு, காலாண்டு அடிப்படையிலும் பிரீமியம் தொகையை செலுத்தலாம். ஒருவேளை பாலிசிதாரர் இறந்து விட்டால் அவருடைய நாமினிக்கு இந்த பணம் கிடைக்கும். அதோடு மட்டுமில்லாமல் இந்த பாலிசியை கணவன், மனைவி இருவருமே பெற்றுக்கொள்ளலாம்.
ஒருவேளை பாலிசிதாரர் பாலிசி காலத்திலேயே இறந்துவிட்டால் அவருடைய மாதாந்திர பிரீமியம் தொகையில் 250 மடங்கு கிடைக்கும். இந்த பாலிசியை வாங்குவதற்கு அடையாள சான்றிதழ், மருத்துவ சான்றிதழ், இதர கேஒய்சி உள்ளிட்ட ஆவணங்கள் அவசியம். அதேபோல் உடல்நிலையை பொறுத்து சிலருக்கு மெடிக்கல் டெஸ்ட் எடுக்கப்படலாம்.