Categories
அரசியல்

ஒரே ஒரு பிரீமியம் செலுத்துங்க போதும்….  மாதம் ரூ.14,000 கிடைக்கும்….  சூப்பரான திட்டம்…!!!

ஒரே ப்ரீமியம் செலுத்தினால், மாதம் ரூ. 14 ஆயிரம் பென்ஷன் கிடைக்கும். இந்த திட்டத்தை பற்றி இதில் பார்ப்போம்.

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசி மக்களின் வாழ்வாதாரத்திற்கும் வருங்கால தேவைக்கும் பல்வேறு நல திட்டங்களை செய்து வருகிறது. மத்திய, மாநில அரசு மூலம் இது நடத்தப்படுவதால் இதில் முதலீடு செய்வதில் பாதுகாப்பானது என்று மக்கள் நம்புகின்றனர். அண்மையில் எல்ஐசி நிறுவனம் பழைய பாலிசி ஒன்றை மீண்டும் புதிப்பித்துள்ளது. ஜீவன் அக்ஷய் பாலிசி ஒரு வருடாந்திர சேமிப்பு திட்டம். இந்த பாலிசியில் சிறப்பு என்ன என்றால் பாலிசிக்கான தொகையை செலுத்திய உடனே பாலிசிதாரர்கள் மாதாந்திர பென்ஷன் கேட்டு பெற முடியும்.

பல்வேறு திட்டங்களை காட்டிலும் இந்த பென்சன் தேவையுள்ளவர்களுக்கு இந்த ஜீவன் அக்ஷய் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 30 வயது முதல் 85 வயது வரை உள்ள அனைவரும் இந்தப் பாலிசி திட்டத்தில் இணைய முடியும். மருத்துவ பரிசோதனை அவசியம் எதுவும் கிடையாது. இந்திய குடிமக்கள் மட்டுமே முதலீடு செய்ய முடியும். ஒரு லட்சம் என்ற குறைந்தபட்ச முதலீட்டில் இந்த பாலிசியை எடுக்கலாம். பாலிசிதாரருக்கு 10 வகையான பிரிவுகளில் இந்த திட்டம் வழங்கப்படுகிறது.

இந்த பாலிசியில் குறிப்பிட்ட தொகையை நிரந்தர முதலீடு செய்த உடனே மாதம்தோறும் 14,000 பென்சன் கிடைக்கும். இந்த ஜீவன் அக்ஷய் பாலிசியில் முதலீடு  செய்த உடனே 14,000 பென்ஷன் கிடைக்க வழி உண்டு. அதற்கு, Option ‘A’-வை அதாவது ‘Annuity payable for life at a uniform rate’ என்ற பிரிவைத் தேர்வு செய்ய வேண்டும்.

உதாரணத்துக்கு 36 வயதான ஒருவர் இந்த ஜீவன் அக்‌ஷய் பாலிசியை எடுக்கும்பட்சத்தில், அவருக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இங்கு பாருங்கள். ஒரு நபர் ஒவ்வொரு மாதமும் 14 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெற விரும்பினால், அவர் எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

வயது: 36
காப்பீட்டு தொகை: 30,00,000
மொத்த பிரீமியம்: 30,54,000

ஓய்வூதியம் (பென்ஷன்):
வருடாந்திர பென்ஷன்: 1,80,000
அரை ஆண்டு பென்ஷன்: 88,500
காலாண்டு பென்ஷன்: 43,913
மாதாந்திர பென்ஷன் : 14,550

இதன் மூலம் பாலிஸி தாரருக்கு மாதத்திற்கு ரூ.14550 ஓய்வூதியம் கிடைக்கும். பாலிசிதாரர் உயிர்வாழும் வரை இந்த ஓய்வூதியம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |