Categories
தேசிய செய்திகள்

ஒரே ஒரு பிரீமியம் போதும்… எல்.ஐ.சியில் புதிய பென்சன் திட்டம்… வாழ்நாள் முழுதும் பென்சன்…!!!

எல்ஐசி சரல் பென்ஷன் திட்டத்தின் கீழ் ஒரு முறை பிரிமியம் செலுத்தினால் போதும் வாழ்நாள் முழுவதும் பென்ஷன் பெற முடியும். இந்தத் திட்டம் தற்போது ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசியில் புதிதாக ஒரு பென்சன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய சரல் பென்ஷன் (Saral Pension) திட்டம் ஜூலை 1 முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 40 முதல் 80 வயது வரையிலானவர்கள் அனைவரும் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். பாலிசி தொடங்கும்போது ஆண்டுத்தொகை விகிதம் உத்தரவாதம் அளிக்கப்படும். ஒரு முறை மட்டும் பிரீமியம் செலுத்தினால் போதும். பின்னர் ஆண்டுத்தொகை செலுத்த வேண்டும்.

நேரடியாக அருகில் உள்ள எல்ஐசி கிளையிலோ, licindia.in என்ற எல்ஐசி இணையதளத்திலோ இந்த பாலிசியை வாங்கிக்கொள்ளலாம். ஆண்டுக்கு குறைந்தபட்சம் 12,000 ரூபாய் தொகை செலுத்த வேண்டும். அதிகபட்ச தொகைக்கு எந்த வரம்பும் இல்லை. ஆண்டு, அரையாண்டு, காலாண்டு, மாதாந்தர முறைகளில் தொகையை செலுத்தவும் வசதி உண்டு. பாலிசி தொடங்கி ஆறு மாதங்களில் கடனும் பெற்றுக்கொள்ளலாம்.

Categories

Tech |