Categories
மாநில செய்திகள்

ஒரே ஒரு பிளான்…. செமையா ஒர்க் அவுட் ஆன கத்திப்பாரா…. குஷியில் மக்கள்…..!!!

சென்னையில் முக்கியமான சாலை சந்திப்பாக கத்திப்பாரா விளங்குகிறது. ஆலந்தூர் பகுதியில் அமைந்துள்ள கத்திப்பாரா ஜங்ஷனில் ஜிஎஸ்டி சாலை, உள்வட்ட சாலை, அண்ணா சாலை, மவுண்ட்- பூந்தமல்லி சாலை ஆகியவற்றுக்கு செல்வதற்கு மாற முடியும். இதன் கீழ் பகுதியில் உள்ள இடத்தை நகர்ப்புற சதுக்கம் என்ற பெயரில் புதுப்பித்து தமிழக அரசு திறந்து வைத்தது. இதனையடுத்து கத்திப்பாரா ஜங்ஷன் வேற லெவலுக்கு மாறிவிட்டது. இந்த இடத்தை தேடி வரும் போது மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு வரை பலதரப்பட்ட மக்களும் பொழுதுபோக்கு இடமாகவும், பசியாற்றும் இடமாகவும், நண்பர்கள் குடும்பத்தினருடன் இனிமையாக நேரம் செலவிடும் இடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கத்திப்பாரா நகர்புற சதுக்கத்தின் வடிவமைப்பு நவீன சென்னையின் அடையாளம் கலாச்சார பெருமைகளையும் பிரதிபலிக்கிறது. இங்கு தமிழனின் உயிரெழுத்துக்கள் பெரிய உருவங்களில் பொருத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் கைவினைப் பொருட்கள் விற்பனையகம், அங்காடிகள் உணவகம், பசுமைப் பகுதி உள்ளிட்டவை அமைந்துள்ளது. இதனைத் தவிர 100க்கும் மேற்பட்ட கார்கள், 150 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. அடிக்கடி சிறப்பு நிகழ்ச்சிகள், தள்ளுபடி விற்பனை, விழிப்புணர்வு நாடகங்கள், நடனம் ஆகியவை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் 21ம் தேதி வரை புத்தக விற்பனை நடைபெற உள்ளது.

அதாவது மூன்று விதமான பெட்டிகளின் நிரம்பும் அளவிற்கு புத்தகங்களை சேகரித்து வாங்கும் வகையில் சிறப்பு நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பலரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தத் திட்டத்திற்கு CMDA நிதியுதவி அளிக்க CMRL செயல்படுத்தி சிறப்பான முறையில் மேலாண்மை செய்து வருகிறது. எனவே சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முன்னெடுத்து வரும் புதிய திட்டங்களில் கத்திபாரா நகர்புற சதுக்கம் போன்ற கட்டமைப்புகளை உருவாக்கினால் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சென்னையில் உள்ள மேம்பாலங்களில் கீழ்பகுதி, மற்றொரு ரயில்களின் வளாகங்கள், மெட்ரோவை ஒட்டியுள்ள பூங்காக்கள் ஆகியவற்றை கையில் எடுத்து புதுப்பிக்க மக்கள் கூடும் இடங்களாக மாற்றலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |