பிஎஸ்என்எல் நிறுவனம் தனது புதிய வவுச்சரை நாடு முழுவதும் உள்ள பயனர்கள் ரீசார்ஜ் செய்யும் வகையில் அறிமுகம் செய்துள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் தனது ரூ.699 வவுச்சரை நாடு முழுவதிலும் உள்ள பயனாளர்களுக்கு கிடைக்கும்படி நீட்டித்துள்ளது. இது ஒரு புதிய வவுச்சர் அல்ல, ஏற்கனவே கேரள வட்டாரத்தை தவிர மீதமுள்ள தொலைத்தொடர்பு வட்டாரங்களில் ரீசார்ஜ் செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த வவுச்சர் கேரள பயனாளர்களுக்கு அவனுக்குக் கிடைக்கிறது. மேலும் இந்த புதிய வவுச்சர் வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி முதல் கேரளாவில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். இந்த வவுச்சரின் நன்மைகள் பிற மாவட்டங்களில் வழங்கும் அதே நன்மைகளை தான் கேரளா வட்டங்களிலும் வழங்கும். இது பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பயனாளர்களுக்கு 699 ரூபாயில் இருந்து 0.5 ஜிபி அளவிலான தினசரி FUP டேட்டா நன்மைகளை வழங்குகிறது. நீங்கள் குறிப்பிட்ட வரம்பை மீறிய பிறகு இணையத்தின் வேகம் 80 கேபிபிஎஸ் ஆக குறையும். அதுமட்டுமன்றி பயனாளர்கள் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் கட்டுப்பாடுகள் இல்லாமல் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளையும் பெற முடியும். இந்தத் திட்டத்தில் 160 நாட்கள் செல்லுபடியாகும். உங்களுக்கு அதிகப்படியான பேட்டா தேவையில்லை என்றால், அழைப்புகள் மற்றும் மெசேஜ் களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு நல்ல திட்டமாக இருக்கும்.
இந்தத் திட்டம் நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தத் திட்டத்தில் ரீசார்ஜ் செய்து கொள்ள பயனாளர்கள் டெலிகாம் நிறுவனத்தின் வலைதளத்திற்கு செல்லவும் அல்லது *444*699#; என்கின்ற யுஎஸ்டி குறியீட்டை பயன்படுத்தலாம். இல்லை என்றால் plan BSNL 699 என்பதை டைப் செய்து 123 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் இந்தத் திட்டத்தை நீங்கள் பெற முடியும். இதனை செய்வதற்கு முன்பாக உங்களிடம் போதுமான அளவு பேலன்ஸ் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
இதனைத் தொடர்ந்து பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பயனாளிகளுக்கு இலவச 4G சிம் கார்டை வழங்குகிறது. இது ஜனவரி 31ஆம் தேதி வரை அணுக முடியும். ஒரு குறிப்பிட்ட கால விளம்பர சலுகையாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலவச 4ஜி சிம் கார்டு பெறுவதற்கு, 100 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட பர்ஸ்ட் ரீசார்ஜ் கூப்பனை தேர்வு செய்ய வேண்டும். அதிலுள்ள நிபந்தனையைப் பூர்த்தி செய்தால் இலவச சிம் கார்டை பெற முடியும்.