மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் என்ற பகுதியை சேர்ந்த 3.7 அடி உயரம் கொண்ட அங்கேஷ் கோஷ்தி என்ற இளைஞர் குழந்தை பருவம் முதலே பல அவமானங்களை சந்தித்து வந்துள்ளார். இருப்பினும் தன்னுடைய உயரத்தை பொருட்படுத்தாமல் பட்டப்படிப்பை முடித்து 2020ஆம் ஆண்டு முதல் வேலை தேடி வருகிறார். ஆனால் எந்த நிறுவனங்களிலும் இவருக்கு வேலை கிடைக்கவில்லை. அதற்கு அவருடைய உயரம் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் அங்கேஷ் கோஷ்தி குறித்து தகவலறிந்த குவாலியர் தெற்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பிரவின் பதாக் சமூக வலைதளங்களில் அங்கேஷ் கோஷ்தி பற்றி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ இணையத்தில் பயங்கர வைரலானது. அடுத்த சில மணி நேரங்களிலேயே பல நிறுவனங்களும் அங்கேஷ் கோஷ்திக்கு வேலை தர முன்வந்தன. இதுவரை 35 நிறுவனங்கள் அங்கேஷை இன்டர்வியூக்கு அழைத்துள்ளன. இதனால் தற்போது அங்கேஷ் கோஷ்தி மற்றும் அவருடைய பெற்றோர் மகிழ்ச்சியில் உள்ளனர்.